[X] Close

பேட்மின்டன் கிளப் லாக்கரில் பணம், நகை, பத்திரங்களைப் பதுக்கிய பெரும்புள்ளி


badminton-lockers-at-elite-bengaluru-club-reveal-assets-in-crores-shocks-citys-rich-and-famous

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jul, 2018 14:11 pm
  • அ+ அ-

பெங்களூரூவில் உள்ள 150 ஆண்டு பாரம்பரியம் மிக்க பேட்மின்டன் கிளப் லாக்கரில் பணம், நகை மற்றும் பத்திரங்களை பதுக்கிய பெரும்புள்ளி வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார்.

பவுரிங் இன்ஸ்டிட்யூடில் உள்ள 3 லாக்கர்கள் நீண்ட காலமாக திறக்கப்படாமல் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பவுரிங் இன்ஸ்டிட் விதிமுறைகளின்படி ஏதேனும் உறுப்பினர் தங்கள் லாக்கர் மெம்பர்சிப்பை புதுப்பிக்கவில்லை என்றால் அதை உடனே வேறு உறுப்பினர்களுக்கு வழங்கிவிடுவர்.

அப்படித்தான் அவினாஷ் அமர்லால் குக்ரேஜா என்பவரின் 3 லாக்கர்களை சங்கத்தினர் திறந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மூன்று லாக்கர்களிலும் மொத்தம் ரூ.3.96 கோடி ரொக்கப் பணம். 8 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகள் அது தவிர கையொப்பம் இடப்படாத காசோலைகள் ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்து பத்திரங்கள் இருந்துள்ளன.

பேட்மின்டன் சங்க நிர்வாகிகள் அதிர்ந்து போயுள்ளனர். உடனே இது குறித்து அவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க. போலீஸார் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். வருமான வரித்துறையினர் நகை, பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

அதற்குள் அவினாஷ் பேட்மின்டன் சங்கத்துக்கு விரைந்துவந்து சங்கச் செயலாளரின் காலில் விழாத குறைக்கு கெஞ்சிய்யுள்ளார். ஆனால், அவர் எதற்கும் மசியவில்லை. சற்று நேரத்தில் ரூ.5 கோடி தருவதாக சங்கச் செயலாளருக்கு ஆசை காட்டப்பட்டிருக்கிறது. அதற்கும் அவர் அடிபணியாததால் பணம் நகைகள் வருமான வரித்துறை வசம் சென்றன.
அவினாஷின் பெற்றோர் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். அவினாஷின் தந்தையும் தொழிலதிபராக இருந்திருக்கிறார். அவினாஷுக்கு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பிருக்கிறது. இந்த சொத்துகள் கர்நாடக அரசியலில் மிக முக்கியமான பெரும் புள்ளியுடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெங்களூருவின் யுபி நகரில் அண்மையில்தான் ரூ.30 கோடி செலவில் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார் அவினாஷ். விரைவில் புதிய வீட்டுக்கு குடிபெயர இருந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவினஷ் மற்றுமொரு பெரிய கிளப்பில் உறுப்பினராக இருக்கிறார். அங்குள்ள லாக்கரிலும் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு ஏதும் கிடைக்கவில்லை.

இந்த ரெய்டு குறித்து பவுரிங் இன்ஸ்டிட்யூட் செயலர் ஸ்ரீகாந்த், "இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டு உபகரணங்களுக்கான லாக்கரில் கோடிக்கணக்கில் சொத்து பதுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இனிமேல் லாக்கர் முறையை நாங்கள் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளோம்" என்றார். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close