ரயில் வருமிடத்தை வாட்ஸ் அப்பில் அறிந்து கொள்ள புதிய வசதி

ரயில் பயணத்தில் ஒரே சலிப்பூட்டும் விஷயம் ரயிலுக்காக காத்திருப்பது. சில நேரங்களில் குறித்த நேரத்தில் ரயில் வராவிட்டால் நடைபாதையை நாம் தேய்துக் கொண்டிருப்போம்.
அந்த நேரத்தை இனி மொபைல் ஃபோனில் செலவிட்டால் நாம் செல்ல வேண்டிய ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறாது, எந்த நடைமேடையில் வந்து சேரும் என்பதை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் இணைந்து இந்திய ரயில்வே லைவ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்காக பிரத்யேக எண் அளிக்கப்பட்டுள்ளது.
7349389104 என்ற இந்த எண்ணில் நீங்கள் பயணிக்கவிருக்கும் ரயிலின் எண்ணை அனுப்பினால் ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் அனுப்பப்படும். இது தவிர டிக்கெட் புக்கிங் நிலவரம், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விவரம் ஆகியனவற்றையும் இந்த எண் மூலம் வாட்ஸ் அப்பில் பெற முடியும்.
SPOT என்று அடித்து ரயிலின் எண்ணை 139 என்ற தொடர்பு எண்ணுக்கு அனுப்பி ரயில் வருமிடத்தை குறுந்தகவல் வாயிலாக அறியும் வசதி ஏற்கெனவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாட்ஸ் அப்பில் இந்த வசதியை மேக் மை ட்ரிம் இணையதளத்துடன் இணைந்து ரயில்வே அமல்படுத்தியிருக்கிறது.