[X] Close
 

ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சி: அமெரிக்காவிலிருது வந்த பயணிக்கு உடல் முழுவதும் கடி


bed-bugs-in-air-indias-business-class

  • பாரதி
  • Posted: 24 Jul, 2018 10:36 am
  • அ+ அ-

ரயில் பயணம் சென்றுவந்தவுடன் என் அத்தை எப்போதும் உடைமைகளை சற்று நேரம் வெளியிலேயே வெயிலில் வைத்துவிடுவார். காரணம் கேட்டால் மூட்டைப்பூச்சி என்பார். வெயிலில் வைத்தால் மூட்டைப்பூச்சிகள் பையிலிருந்து வெளியே போய்விடுமாம்!

ரயில் என்றால் மூட்டைப் பூச்சி இருக்குமென்று நமக்கு ஓரளவு பரிச்சியம்தான். ஆனால் விமானத்தில் மூட்டைப்பூச்சி இருந்தால். அதுவும் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் ஏர் இந்தியா விமானத்தில் அதுவும் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளில் மூட்டைப் பூச்சி இருக்குமென்று நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் நியூ ஜெர்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த பெண் மூட்டைப் பூச்சிகளால் தான் அடைந்த இன்னல் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இமெயில்களை அனுப்பியிருக்கிறார்.

சவுமியா ஷெட்டி, இவர் கடந்த ஜூலை 18-ம் தேதி தனது மூன்று குழந்தைகளுடன் நியூ ஜெர்சியில் இருந்து இந்தியா புறப்பட்டு வந்திருக்கிறார். ஏர் இந்தியா விமானம் AI-144-ல் பயணித்தின்போது மூட்டைப் பூச்சிகள் கடித்ததால் அவருக்கு உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சரியாக ஒரு நாளைக்கு முன்னர்தான் பிரவீன் டோன்சேகர் என்ற பயணி ஏர் இந்தியா விமானம் குறித்து தனது ட்விட்டரில், "ரயில்களில் மூட்டைப் பூச்சிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நமது மஹாராஜாவில் அதுவும் பிசினஸ் வகுப்பில் இப்படி ஓர் அனுபவம் அதிர்ச்சியளிக்கிறது" என ட்வீட் செய்து அதை விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவையும் டேக் செய்திருந்தார்.

சவுமியா ஷெட்டியின் இமெயிலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் பதிலளித்துள்ளது. அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும். விமானத்தில் பூச்சிக் கொல்லி தெளிப்பான்கள் அடிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்துள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close