[X] Close

டெல்லி புராரி இல்ல நாய் மாரடைப்பால் பலியானது


burari-familys-dog-rescued-by-animal-activists-dies-of-shock

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jul, 2018 16:17 pm
  • அ+ அ-

டெல்லியில் புராரியில் உள்ள ஒரே வீட்டைச் சேர்ந்த 11 பேர் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்த நிலையில் அவர்கள் வளர்த்து வந்த நாய் இன்று காலை மாரடைப்பால் உயிரைவிட்டது.

புராரி சம்பவத்துக்குப் பிறகு அந்த வீட்டினர் வளர்த்துவந்த நாய் குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சய் மஹோபத்ரா அந்த நாயை தனது பராமரிப்பில் வளர்க்க ஆசைப்பட்டு அழைத்துச் சென்றார்.

போலீஸாரிடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்ற அவர் அந்த நாயை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். டாமி என்ற பெயர் கொண்ட அந்த நாய் ஆரம்பத்தில் அடம் பிடித்தாலும் பின்னர் அவரது வழிக்கு வந்தது.

இத்தனை நாட்கள் நன்றாக இருந்த நாய் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று திரும்பியபோது திடீரென மயங்கி விழுந்தது. மருத்துவர்கள் சோதித்தபோது நாய் இறந்திருந்தது. பிரேத பரிசோதனையில் நாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இது குறித்து சஞ்சய், "பொதுவாக வீட்டு நாய்கள் அவற்றின் எஜமானர் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ்வது கடினம். டாமி அந்த வீட்டாருடன் மிக நெருக்கமாக வளர்ந்துள்ளது. அவர்களில் யாருமே இல்லாததால் டாமி கடுமையான மன உளைச்சலில் இருந்தது. சமீப நாட்களாக இயல்பு நிலைக்குத் திரும்பிவந்தது. இருந்தாலும் அதற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close