[X] Close
 

போலீஸ் சீருடையில் சாமியாரிடம் ஹீலிங் தெரபி: காவலர் சஸ்பெண்ட்


delhi-cop-shifted-after-photo-of-healing-session-with-godwoman-emerges

  • பாரதி
  • Posted: 23 Jul, 2018 14:58 pm
  • அ+ அ-

மேற்கு டெல்லியில் சீருடையில் இருந்த காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் பெண் சாமியாரிடம் ஹீலிங் தெரபி செய்து கொண்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஜனகாபுரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக சாமியார் நமிதா ஆச்சார்யாவிடம் எனர்ஜி ஹீலிங் முறையில் குணம் பெற முயற்சித்திருக்கிறார். காவல் நிலைய அறையில் காவலர் சீருடையில் அமர்ந்திருக்க பெண் சாமியார் அவரது தலையில் கை வைத்து சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அந்தக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் பிரபல சாமியார் ராதா மா- வை காவல் நிலையத்திலுள்ள தனது இருக்கையில் அமர வைத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது காவலர் ஒருவர் சீருடையுடன் காவல் நிலையத்தில் வைத்து ஹீலிங் தெரபி செய்து கொண்டது சர்ச்சையாகி உள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close