காதலுக்கு கண்ணில்லை.. காதலர்கள் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் கருத்து

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்று அதன் மாணவி ஒருவர் சீனியர் மாணவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் சஸ்பெண்ட் செய்தது. இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "காதலுக்கு கண்கள் இல்லை. காதல் ஓர் ஆழமான உணர்வு. அது தனிநபரின் சுதந்திரம் சார்ந்தது. அதனால், திருமண வயதைத் தொட்ட இருவர் காதல் செய்வதையும் அவர்கள் காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேற்ய்வதையும் ஒழுக்கக்கேடாகக் கருத முடியாது.
சிலருக்கு இது பாவச் செயலாகத் தோன்றலாம். ஆனால், சட்டப்படி இது சுதந்திரம் சார்ந்தது.
எனவே, 21 வயதான சம்பந்தப்பட்ட மாணவரும் 20 வயதான சம்பந்தப்பட்ட மாணவியும் அதே கல்லூரியில் தங்கள் படுப்பைத் தொடரலாம். ஒழுக்கத்தைக் காரணம் காட்டி கல்லூரி அவர்களை நீக்க முடியாது" என்று தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் மாணவியின் வீட்டார் மகளின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு தயார் எனத் தெரிவித்துள்ளனர்.