[X] Close
 

அமைச்சரின் காரை வழிமறித்த கன்னியாஸ்திரி


on-camera-nun-blocks-kerala-minister-s-car-she-had-a-jumbo-complaint

  • பாரதி
  • Posted: 23 Jul, 2018 12:58 pm
  • அ+ அ-

கேரள மாநிலம் பாலக்காட்டில் கான்வன்ட் பள்ளியின் கன்னியாஸ்திரி ஒருவர் அமைச்சரின் காரை வழிமறித்து கோரிக்கையை முன்வைத்த காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

வடக்கு பாலக்காடு மாவட்டத்தின் சோலையாறு வனச்சரகத்துக்கு அருகே கான்வென்ட் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கேதான் கன்னியாஸ்திரி ரின்ஸியும் இருக்கிறார்.

அண்மையில் அவ்வழியாக கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ அவரது காரில் வந்தார். அப்போது காரின் முன்னாள் சென்று காரை வழிமறித்தார் கன்னியாஸ்திரி ரின்ஸி.

ரின்ஸியின் திடீர் செய்கையால் ஒரு நிமிடம் அமைச்சர் ஸ்தம்பித்துப்போனார். அவர் கார் கண்ணாடியைத் திறந்தவுடன் ரின்ஸி தனது புகாரைக் கூறினார். "எங்கள் பள்ளி வளாகத்துக்குள் காட்டு யானைகள் அடிக்கடி ஊடுருவி விடுகின்றன. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள்தான் இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும்" என்று கோரினார்.

அமைச்சர் காரில் இருந்து இறங்காவிட்டாலும்கூட கன்னியாஸ்திரியின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிச் சென்றார்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close