[X] Close

சிங்கத்திடமிருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்


hero-dog-saves-owner-from-lions-in-gujarat-s-amreli

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jul, 2018 10:51 am
  • அ+ அ-

நாய்கள் எப்போதுமே மனிதர்களின் சிறந்த நண்பன் என்பதை அவ்வப்போது இப்படிப்பட்ட செய்திகள் உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட எஜமானரை லாவகமாகக் காப்பாற்றியிருக்கிறது அவரது வளர்ப்பு நாய்.

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியின் அம்பார்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாவேஷ் ஹமிர் பர்வாத் (25). இவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு 3 சிங்கங்கள் வந்தன. 

அந்த சிங்கங்கள் அவரது ஆடுகளைத் தாக்கத் தொடங்கின. அப்போது தனது ஆடுகளைக் காப்பாற்ற முயன்றார் பாவேஷ். ஆனால், அவரால் அவரது ஆடுகளைக் காப்பாற்ற முடியவில்லை. மூன்று ஆடுகளை சிங்கங்கள் கொன்றன. பின்னர் பாவேஷை குறிவைத்தன. பாவேஷ் சிங்கங்களிடம் சிக்கிக் கொண்டபோது அவரது வளர்ப்பு நாய் பயங்கரமாக சத்தம் எழுப்பியது. நாய் விநோதமாக குரைப்பதையறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். 

பெருங்கூட்டம் ஒன்று திரண்உ வருவதைப் பார்த்த சிங்கங்கள் அங்கிருந்த ஓடின. பாவேஷ் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கங்கள் நடமாட்டம் குறித்து ஊர்மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close