[X] Close

அமித் ஷாவின் ட்வீட்களும் அரசியல் நோக்கர்களின் கருத்தும்


no-confidence-motion-defeat-prelude-to-lok-sabha-poll-results-amit-shah

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jul, 2018 14:19 pm
  • அ+ அ-

நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைதான் இன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஆனால், மற்றுமொரு தலைப்பு செய்திக்கான தகவலாக அமையும் என்ற ரீதியில்தான் அமைந்துள்ளன பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் ட்வீட்கள் எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். 

அமித்ஷாவின் ட்வீட்கள்..
'நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசுக்குக் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. வாரிசு அரசியலுக்குக் கிடைத்த தோல்வி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவை தேர்தல் முடிவுகளுக்கான முன்னோட்டம். மக்கள் மோடி மீது முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலையும் இனவாதத்தையும் வளர்த்தெடுகிறது. மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்த பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் கக்கிய வெறுப்பு இதை தெளிவாகக் காட்டுகிறது.

பெரும்பான்மையும் இல்லாமல் கொள்கையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் வறட்சியைக் காட்டுகிறது. மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் அரசாங்கத்தின் மீது அர்த்தமற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளதோடு ஜனநாயகத்தை ஒடுக்கும் தனது மரபையும் காங்கிரஸ் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது" இவ்வாறு அமித் ஷா அடுத்தடுத்த ட்வீட்களில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை 2019 தேர்தலில் காங்கிரஸை வலுப்படுத்துவதற்கான அடித்தளம். ஊடக வெளிச்சத்தைப் பெற்றுவிட்ட அந்த உரை, ராகுல் காந்தியை மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக நிலைநிறுத்த ஆரம்பப் புள்ளி.

அப்படியிருக்க அதற்கு பாஜக தலைவர் அமித் ஷாவின் எதிர்வினை எதுவும் எடுபடும் வகையில் அமையில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நிச்சயம் வெற்றி பெறாது என்ற கணிப்பை காங்கிரஸும் செய்திருக்கும். ஆனாலும், அந்தத் தருணத்தைக் கோரியதற்குக் காரணமே இத்தகைய உரையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே. எனவே, அமித் ஷா கூறுவதுபோல் அர்த்தமற்ற தீர்மானம் அல்ல. இவை வழக்கமான அரசியல் சமாளிப்புகள்" என்று கூறியுள்ளனர்.  

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close