[X] Close

கும்பல் வன்முறையின் வரலாற்றைத் தேடுங்கள்: மத்திய அமைச்சரின் அதிர்ச்சிப் பேச்சு


more-pm-modi-becomes-popular-more-such-incidents-union-minister-meghwal-on-alwar-lynching

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jul, 2018 12:30 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி அக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் ஒரு மோசமான வன்முறையை அணுகியவிதம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

ஆல்வார் சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், "கும்பல் வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். ஆனால், இது தனியொரு நிகழ்வு அல்ல. இதன் வரலாற்றைத் தேடிப்பிடியுங்கள். இது ஏன் நடக்கிறது? யார் இதை நிறுத்த வேண்டும்? என்பதைக் கண்டுபிடியுங்கள். 1984-ல் சீக்கிய கலவரத்தில் என்னவானது. இந்த தேசத்தின் வரலாறு அறிந்த மிகப்பெரிய கும்பல் வன்முறையே அதுதான்.

இத்தகைய சம்பவங்கள் எல்லாம் பிரதமர் மோடியின் கொள்கைகளையும் திட்டங்கங்களையும் திசைதிருப்பும் எதிர்வினைகள். மோடி எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு இத்தகைய சம்பவங்களும் அதிகரிக்கும்.

பிஹார் தேர்தலின்போது விருதுகளைத் திருப்பித் தந்தனர். அவார்ட் வாப்ஸி என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. உத்தரப் பிரதேச தேர்தலில் கும்பல் வன்முறை முன்வைக்கப்பட்டது. இனி, 2019 தேர்தலில் வேறு ஏதாவது ஒன்று உருவாக்கப்படும். மோடி கொள்கைகளை வகுக்கிறார் எதிர்வினைகள் இப்படி உருவாக்கப்படுகின்றன" எனக் கூறினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு பொறுப்பற்றது என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close