கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஜூம்லா ஸ்டிரைக்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு நாடாளுமன்றத்துக்கு உள்ளே மட்டும் ஓங்கி ஒலிக்கவில்லை பேச்சு ஓய்ந்த பின்னர் இணையவெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, "தெலுங்கு தேசத் தலைவர் ஜெயதேவ் கல்லாவின் பேச்சை ஆழமாகக் கவனித்தேன். நீங்கள் 21-ம் நூற்றாண்டின் விந்தையான அரசியல் ஆயுதத்தால் பாதிகப்பட்டிருக்கிறீர்கள். இதற்குப் பெயர் ஜூம்லா ஸ்டிரைக். நீங்கள் மட்டுமல்ல விவசாயிகள், தலித்துகள், பழங்குடிகள், இளைஞர்கள், பெண்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஜூம்லா ஸ்டிரைக்கின் அறிகுறிகள் என்ன தெரியுமா. முதலில் உங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் பெருமளவில் கடத்தப்படும் பின்னர் அதிரிச்சியும் வேதனையும் தொடரும்" என்றார்.
ராகுல் காந்தி உரை முடிந்ததும் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையானது ஜூம்லா ஸ்டிரைக். ஜூம்லா என்றால் இந்தியிலும் உருதிலும் போலி வாக்குறுதி என்று அர்த்தமாம்.