[X] Close

பூகம்பம் வந்துவிட்டது; ராகுலின் பேச்சை சிலாகித்த சசிதரூர்


what-an-astonishing-performance-by-rahulgandhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jul, 2018 15:56 pm
  • அ+ அ-

மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தியின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னே ஒரு வியத்தகு செயலாற்றல். இது மாற்றத்தை உண்டாக்கும் பேச்சு. அரசாங்கம் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பெருமைகளை கிழித்தெறிந்ததுடன் யாருமே எதிர்பார்க்காத அந்த தழுவல் வரை ஆச்சரியமாக இருந்தது. பாஜக விக்கித்துப் போனது. பூகம்பம் வந்துவிட்டது" என்று பாராட்டியுள்ளார்.

#BhukampAaGaya என்ற ஹேஷ்டேக் கீழ் அவர் பகிர்ந்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்கள்தான் ராகுல் காந்தி பேசினார். ஆனால், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், பெண்கள் பாதுகாப்பின்மை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் என ஒரு சாமான்யன் என்னவெல்லாம் இந்த அரசாங்கத்தைப் பார்த்து கேட்க நினைத்திருப்பானோ அத்தனை பேரின் குரலாக ராகுல் இன்று இருந்தார் என்று இணையவெளியில் பொதுமக்கள் ராகுலைக் கொண்டாடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close