[X] Close

5 நபர்களுக்கு தான் இனி ஃபார்வர்ட் செய்ய முடியும்: வாட்ஸ் அப் கெடுபிடி


whatsapp-limits-forwarding-messages-to-five-users

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jul, 2018 12:33 pm
  • அ+ அ-

வாட்ஸ் அப் வதந்திகளால் கும்பல் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையில் பல்வேறு கெடுபிடிகளை அந்நிறுவனம் புகுத்தி வருகிறது.

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் வாட்ஸ் அப் தகவலை இனி ஒருவர் தனது கான்டாட் லிஸ்டில் உள்ள 5 பேருக்கு மட்டும்தான் ஃபார்வர்ட் செய்ய முடியும். இதன்மூலம் ஒரே நேரத்தில் பலருக்கும் வாட்ஸ் அப் தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

இது குறித்து வாட்ஸ் அப் தனது வலைப்பக்கத்தில், "உலகிலேயே இந்திய பயனாளர்களே வாட்ஸ் அப்பில் அதிகளவில் புகைப்படங்கள், வீடியோக்கள், குறுந்தகவல்களைப் பகிர்கிறது. இந்நிலையில், வாட்ஸ் அப் தகவலை ஒரே நேரத்தில் பல தனிநபர்களுக்கும் பகிர்வதைக் கட்டுப்படுத்தும் முயறிசியில் இறங்கியிருக்கிறோம். பரிச்சார்த்த முயற்சியாக 5 நபர்களுக்கு மட்டுமே வாட்ஸ் அப் தகவலைப் பகிர்வதை அமல்படுத்தியுள்ளோம். மீடியா மெஸேஜுக்கு அடுத்து உள்ள குவிக் ஃபார்வர்ட் பட்டனை அகற்றவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி வாட்ஸ் அப் சில மாற்றங்களைச் செய்தது. அதன்படி ஃபார்வர்ட் செய்யப்படும் தகவல்கள் ஃபார்வர்டு என்ற லேபலுடன் வரும் எனத் தெரிவித்தது. தற்போது மேலுமொரு கெடுபிடியைப் புகுத்தியுள்ளது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close