[X] Close

84 நாடுகளுக்கு ரூ.1484 கோடி செலவழித்துச் சென்றுவந்த மோடி!


rs-1-484-crore-spent-on-pm-modi-s-foreign-travel-since-2014-govt

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jul, 2018 12:02 pm
  • அ+ அ-

2014-ல் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து நரேந்திர மோடி இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்ற வகையில் ரூ.1484 கோடி செலவாகியிருக்கிறது.

மோடி இதுவரை 84 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை அவர் சுற்றிப் பார்த்திருக்கிறார்.

இத்தகவலை, மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். 

மொத்தம் செலவான ரூ.1484 கோடியில் பிரதமரின் விமானப் பராமரிப்புக்கு மட்டுமே ரூ.1088.42 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

சார்டர்ட் விமான பராமரிப்புக்கு ரூ.387.26 கோடி செலவாகியுள்ளது. ஹாட்லைன் செலவுக்கு ரூ.9.12 கோடி செலவாகியுள்ளது. இந்த செலவினங்களில் 2018-19 விமானப் பராமரிப்பு செலவு இன்னும் சேர்க்கப்படவில்லை. 
2014-15-ல் மோடி 13 நாடுகளுக்குச் சென்றார். 2015-16-ல் 24 நாடுகளுக்கும் 2017-18-ல் 18 நாடுகளுக்கும் 2018 தொடங்கியதிலிருந்து இதுவரை 10 நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close