[X] Close

ஹிமா தாஸை கிண்டலடித்த தடகள கூட்டமைப்பு: மவுனம் கலைக்காத அமைச்சர்


rajyavardhan-rathore-mum-on-athletics-federation-of-india-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jul, 2018 10:43 am
  • அ+ அ-

தங்க மங்கை ஹிமா தாஸை கிண்டலடித்த இந்திய தடகள கூட்டமைப்புக்கு பதில் ஏதும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்.

இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஹிமா தாஸ் ஆங்கிலத் திறன் சற்று குறைவுதான் என்று இந்திய தடகள கூட்டமைப்பு பதிந்த ட்வீட் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது குறித்து முன்னாள் ஒலிம்பிக் பதக்க வீரரும் தற்போதைய அமைச்சருமான ராய்வர்தன் ரத்தோரின் மவுனம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மக்களவையில் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சாதனை மங்கை:
அசாம் மாநிலம் நகோன்  மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கந்துலிமரி என்ற கிராமத்தை சேர்ந்த18 வயதான ஹிமா தாஸ் கடந்த வாரம் பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகள உலக சாம்பியன் ஷிப்பில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பந்தய இலக்கை அவர் 51.46 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தடகளத்தில் டிராக் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் அனைத்து வகையிலான வயது பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஹிமா தாஸ்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close