[X] Close

டீமானிட்dyeசேஷன் நோட்டுகள் ஒரு பார்வை..


rbi-to-issue-new-design-rs-100-denomination-banknote

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jul, 2018 16:12 pm
  • அ+ அ-

கறுப்புப் பணத்தை பிடித்து விடுவோம்; கள்ளப் பணத்தை ஒழித்துவிடுவோம்; தீவிரவாத செயல்களுக்கான பணம் தடுத்து நிறுத்தப்படும்; லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்படும் என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து 2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்கு தாங்கள் வங்கியில் சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல் சாமானியர்கள் தவித்தபோதுதான் கர்நாடகாவில் ஜனார்த்தன ரெட்டி வீட்டுத் திருமணம் பிரம்மாண்ட பிரம்மாண்டமாக நடந்தது.

நாட்கள் உருண்டோடிவிட்டன. கள்ள நோட்டுகள் வழக்கம்போல் அச்சாகிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ரூ.2000 நோட்டுகள் கள்ளநோட்டு செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதைவிட கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்த பணத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. இதைப் பற்றி கேட்டால் அரசாங்கமோ ஸ்விஸ் வங்கியில் இருப்பது எல்லாமே கறுப்புப் பணம் என்று அர்த்தம் கூறுகின்றனர்.

இப்படி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மீதான விவாதங்கள் நீண்டு கொண்டே இருக்கும்போதுதான் ஆர்.பி.ஐ., புதிய ரூ.100 நோட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. லாவண்டர் நிறம் அதாவது மென்னீல நிறம்.

ரூ.2000 நோட்டு பிங்க் நிறம், ரூ.500 நோட்டு சாம்பல் நிறம், ரூ.200 நோட்டு காவி நிறம், ரூ.50 நோட்டு பச்சை நிறம் என்று வண்ண வண்ண நோட்டுகள் வரிசையில் புதிய சாயத்தில் வந்திருக்கிறது புதிய ரூ.100 நோட்டு.

டீமானிட்டைசேஷனை டீமானிட்dyeசேஷன் என்று பகடியாகச் சொல்லலாம் போல். dye என்றால் வண்ணச்சாயம் என்று பொருள். விதவிதமான சாயங்களில் வரும் நோட்டுகளை நெட்டிசன்கள் டீமானிட்dyeசேஷன் நோட்டுகள் என்று கிண்டல் செய்கின்றனர்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close