[X] Close
 

புற்றுநோய் பரிசோதனைக்கு குவியும் மக்கள்: நன்றி சோனாலி பெந்த்ரே


sonali-bendres-story-triggers-rise-in-check-ups

  • பாரதி
  • Posted: 19 Jul, 2018 12:14 pm
  • அ+ அ-

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை சமூக வலைதளம் மூலம் அறிவித்த பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரே இன்று பலர் தங்கள் உடலை முழு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தூண்டுகோளாக இருந்திருக்கிறார் என்றால் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இது குறித்து மருத்துவர்கள் சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். யூரோ ஆன்காலஜிக்கல் ரோபோடிக் அறுவை நிபுணர் மருத்துவர் அனுப் ரமணி கூறும்போது, "வங்கி உயரதிகாரி ஒருவர் கேன்சர் பரிசோதனைக்காக வந்தார். சோனாலி பெந்த்ரே தனக்கு கேன்சர் இருப்பதை அறிவித்தபோதுதான் அவருக்கும் இப்படிப்பட்ட நோய் தனக்குள்ளும் ஒளிந்திருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளும் எண்ணம் வந்திருக்கிறது. ஆண்களைப் பரவலாகத் தாக்கும் புற்றுநோய் வகை எதுவென்பதைத் தேடியிருக்கிறார். பிராஸ்ட்ரேட் கேன்சர்தான் ஆண்களை அதிகமாகத் தாக்குகிறது என்று அறிந்துகொண்டு என்னிடம் பரிசோதனைக்காக வந்தார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு அந்நோய்க்கான அறிகுறி எதுவுமே இல்லை என்றவுடன் மகிழ்ச்சியாகச் சென்றர்.

இதேபோல் 28 வயது இளைஞர் ஒருவர் இதே புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் டெஸ்ட்டை எடுத்துக் கொண்டார். 
பிரபலமான ஒருவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து பகிரங்கப்படுத்தும் போது இத்தகைய அச்ச உணர்வு பரவலாக ஏற்படுவது இயல்பே. சோனாலி பெந்த்ரேயின் அறிவிப்புக்குப் பின்னர் வாரத்துக்கு 4 முதல் 5 நோயாளிகள் வரை இத்தகைய பரிசோதனைகளுக்காக வருகின்றனர்" என்றார்.

மகப்பேறு நல மருத்துவர் டாக்டர் கிரண் கோல்ஹோ கூறும்போது. "சோனாலி பெந்த்ரே கேன்சரை அறிவித்த பிறகு என்னுடைய பழைய நோயாளிகள்கூட எனக்குப் ஃபோன் செய்து சோதனை செய்துகொள்ள நேரம் கேட்கின்றனர். கேன்சர் என்ற கொடிய நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அதிலிருந்து மீள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். மெனோபாஸுக்கு முந்தைய பருவத்தில் இருக்கும் பெண்கள் அதிகமாக பரிசோதனைக்கு வருகின்றனர். இப்போதெல்லாம் வாரத்துக்கு மூன்று பெண்களாவது கேன்சர் ஸ்க்ரீனிங் செய்து கொள்கின்றனர். 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் பிரபலம் ஏஞ்சிலனா ஜோலி மேஸக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஏராளமான அமெரிக்கப் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர். அதைப் போன்றதொரு உணர்வுதான் இப்போது இங்கும் சோனாலியின் கேன்சர் நோய் அறிவிப்புக்குப் பிறகு நிகழ்கிறது" என்றார்.
தெற்கு மும்பையைச் சேர்ந்த மகப்பேறு நல மருத்துவர் துரு ஷா கூறும்போது, "வரும்முன் காக்கும் நோய் தடுப்பு முறைக்கு இந்தியா விழித்தெழ் வேண்டும். நோய் அறிகுறியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பின்னால் அதிர்ச்சியடைய வேண்டியிருக்காது. வெளிநாடுகளில், பெண்கள் வழக்கமான பேப் ஸ்மியர் சோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உதவுவதில்லை. எச்.பி.வி. தடுப்பூசி, பாப் ஸ்மியர் சோதனை, மார்பக சோதனை ஆகியன பெண்கள் ஆண்டுதோறும் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m

[X] Close