[X] Close
 

காங்., கலாய்ப்பு வீடியோவில் பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா


acche-din-where-why-french-footballer-pogba-stars-in-new-congress-dig

  • பாரதி
  • Posted: 19 Jul, 2018 09:57 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஓய்ந்துவிட்டது ஆனால் அதன் சுவாரஸ்யங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கலாய்ப்புகள் இன்னும் ஓயவில்லை.

நெய்மர் சேலஞ்ச் கலாய்ப்புகள் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க பிரான்ஸ் வீரர் போக்பாவை வைத்து பாஜகவை கலாய்க்க வீடியோ ஒன்றை களமிறக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றித் தருணத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா வெளிப்படுத்திய பாவனையை பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அந்த வீடியோவை வைத்து பாஜகவின் அச்னே தின் (நல்ல நாள்) வாக்குறுதியைக் கலாய்த்திருக்கிறது.

அந்த வீடியோவில் போக்பா அங்குமிங்கும் சுற்றி சுற்றி ஏதோ தேடுவது போல் பாவனை செய்திருப்பார். அந்த வீடியோவுக்கு ஒரு கேப்ஷன் இட்ட காங்கிரஸ் கட்சி ஒருவேளை இந்தியர்களிடம் யாராவது அச்னே தின் (நல்ல நாள்) குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் இப்படித்தான் தேடுவார்கள் எனக் கூறியிருந்தது.

இது ட்விட்டரில் வைரலானது. ஆனால் வைரலான அதே வேகத்தில் எதிர்வினையும் வந்து சேர்ந்தது. அதே வீடியோவைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக ஆதரவாளர் ஒருவர், "ஒருவேளை மோடிக்கு எதிராக செயல்படக்கூடிய வலுவான காங்கிரஸ் தலைவர் யார் என்று கேட்டால்.. இப்படித்தான் தேடவேண்டியிருக்கும்" என்று தலைப்பிட்டது.

வீடியோவைக் காண..




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close