[X] Close

டோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ


kerala-mla-breaks-barrier-at-toll-plaza

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jul, 2018 16:29 pm
  • அ+ அ-

கேரளாவில் எம்.எல்.ஏ., ஒருவர் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் டோல்கேட்டின் தடுப்பை உடைத்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கேரள மாநிலம் திரிசூரில் உள்ள டோல்கேட் ஒன்றில் சற்று கூடுதல் நேரம் காத்திருக்க நேர்ந்ததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., பி.சி.ஜார்ஜ் தனது சொகுசு காரில் இருந்து இறங்கிவந்து டோல்கேட் தடுப்பை உடைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எம்.எல்.ஏ., தடுப்பை உடைப்பதைப் பார்த்ததும் அவரது ஆதரவாளர்களும் டிரைவரும் இணைந்து கொண்டு தடுப்பை முழுமையாக உடைத்தெரிகின்றனர். பின்னர் அனைவரும் காரில் ஏறி புறப்பட்டுச் செல்கின்றனர்.

இந்த காட்சி வைரலானதை அடுத்து ஜார்ஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். "ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். எனது காரில் எம்.எல்.ஏ., ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தும்கூட சுங்கச்சாவடியில் இருந்தவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்களும் அமைதியாகக் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு பின்னால் இருந்த வாகனங்களில் இருந்து ஹார்ன் சத்தம் ஒலிக்கப்பட்டது. எவ்வளவு நேரம் நான் காத்திருக்க முடியும். எனக்கு அங்கிருந்து செல்லும் உரிமை இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி அப்படிச் செய்தோம்" என்றார்.

பி.சி.ஜார்ஜ் இத்தகைய சர்ச்சைகளில் சிக்குவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னதாக, தனக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய எஸ்டேட் ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் இவர் மீது புகார் இருக்கிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close