[X] Close

மண்டேலாவின் 100-வது பிறந்தநாள்: ட்விட்டரில் நினைவுகூர்ந்த சச்சின்


master-blaster-extends-birthday-wishes-to-mandela

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jul, 2018 16:07 pm
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்தநாளை ஒட்டி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர், கறுப்பர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து 27 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. அவரது 100-வது பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வேளையில் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து ட்வீட் பகிர்ந்திருக்கிறார்.

அவரது ட்வீட்டில், "நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்தநாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். மிகச் சிறிய வயதிலேயே அவரை சந்தித்த நேர்ந்ததை வாழ்வின் செல்வமாகக் கருதுகிறேன். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அவரைப் பார்த்து ஊக்கமடையவும் ஏராளம் இருக்கிறது" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டுடன் நெல்சன் மண்டேலாவுடன் தான் எடுத்தப் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close