[X] Close

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அகிலேஷ் 


akhilesh-helps-accident-victims-on-agra-lucknow-expressway

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jul, 2018 14:25 pm
  • அ+ அ-

ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

உனாவோ பகுதியில் விபத்து நடந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற அகிலேஷ் யாதவ் உடனடியாக காரை நிறுத்தினார். தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தை அனுப்பி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ உத்தரவிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் தனது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு உதவினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. 

இது குறித்து அகிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். விபத்தில் சிக்கியவர்கள் இஸ்கான் கோயிலுக்கு வந்தவர்கள்.

நெடுஞ்சாலையில் காரின் குறுக்கே வந்த நாய் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இவ்வாறாக நாய், மாடுகள் போன்ற விலங்குகள் திரிவிதை தவிர்க்க அரசு நடவடிக்கை வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close