[X] Close
 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ராகுலின் ட்வீட்


rahul-tweet-gains-political-mileage

  • பாரதி
  • Posted: 17 Jul, 2018 16:37 pm
  • அ+ அ-

அரசியல் தலைவர்கள் அன்றாடம்தான் ட்வீட் செய்கிறார்கள். எதிர்க்கட்சி மீதான விமர்சனமோ இல்லை ஏதோ சாதனையாளருக்கு பாராட்டோ பிறந்தநாள் வாழ்த்தோ ஏதோ ஒன்று பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால், அத்தனையும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதில் சில செய்திக்கானதாக மட்டும் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இன்றைய ட்வீட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த ட்வீட்டில் அவர், "வரிசையில் கடைசியில் நிற்கும் மனிதருடன் நானும் நிற்கிறேன். சுரண்டப்பட்ட, விளிம்பிற்குத் தள்ளப்பட்ட, தண்டிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்.
அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கைகளோ எனக்கு பொருட்டல்ல.
வலியில் இருப்பவர்களை நான் ஆரத்தழுவிக் கொள்கிறேன். வெறுப்பையும் அச்சத்தையும் அழிக்கிறேன். 
எல்லா உயிரினங்களையும் நேசிக்கிறேன்.
நான்தான் காங்கிரஸ்"
என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இன்றைய சூழலில் இந்திய தேசத்துக்குத் தேவையான அனைத்தையும் அவர் பட்டியலிட்டுள்ளார். கட்சியை உருவகப்படுத்தி அவர் பதிவிட்டுள்ள இந்த ட்வீட் நிச்சயமாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close