[X] Close

எல்லை தாண்ட வேண்டாம்; நாங்கள் பலமற்றவர்கள் இல்லை: பரத்பூர் இளம்பெண் ஆவேசம்


no-girl-is-weak-if-you-cross-limits-we-ll-raise-our-voices

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Jul, 2018 12:35 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் தன்னைப் பின்தொடர்ந்து சீண்டிய இளைஞரை அடித்து துவைத்த இளம்பெண், தான் ஏன் அப்படிச் செய்தேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இளைஞர் ஒருவரை அந்தப் பெண் அடித்து துவைக்கும் காட்சி இணையதளங்களில் வைரலானது. அந்த இளைஞரை அடிக்கும்போது, "நான் கடினமாக உழைப்பதற்காக இங்கு வருகிறேன்.. நீ என் பெயரைக் களங்கப்படுத்துகிறாய்" என்று கூறிக்கொண்டே அடிக்கிறார்.

தினமும் காலையில் மைதானத்துக்குப் பயிற்சிக்கு வரும் அந்த இளம் பெண்ணை அந்த இளைஞர் பின் தொடர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் தன்னுடன் தினமும் தொலைபேசியில் அடிக்கடி பேசுவதாக மற்றவர்களுடன் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் கடந்த 13-ம் தேதி காலையில் பயிற்சி செய்ய வந்த அந்தப் பெண்ணிடம் வழக்கம்போல் அந்த இளைஞர் சீண்டலில் ஈடுபட  கொதித்தெழுந்த அப்பெண் இளைஞரை அடித்தார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நீங்கள் (இளைஞர்கள்) உங்களை டொனால்டு ட்ரம்பின் மகன் என நினைத்துக் கொண்டால் அது உங்கள் தவறு. எந்த ஒரு பெண்ணும் பலவீனமானவள் அல்ல. நீங்கள் எல்லை தாண்டினால் நாங்கள் குரலை உயர்த்துவோம். உங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும். அந்த இளைஞர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காகவே நான் அவரை போலீஸில் பிடித்துக் கொடுக்கவில்லை. பாடம் புகட்டவே அடித்தேன்" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close