[X] Close

பிரான்ஸுக்கு வாழ்த்து சொல்லி வாங்கிக்கட்டிக் கொண்ட கிரண் பேடி


was-sharing-joy-with-puducherrians-kiran-bedi-on-fifa-troll

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jul, 2018 15:45 pm
  • அ+ அ-

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை ட்விட்டரில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காரணம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்து சொல்லி அவர் பதிவிட்ட ட்வீட். அந்த ட்வீட்டில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளே கிரண் பேடியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய வைத்திருக்கிறது. 

"நாங்கள்.. புதுச்சேரிவாசிகள் (ஒரு காலத்தில் பிரான்ஸ் பிராந்தியத்தில் இருந்தவர்கள்) இன்று உலகக் கோப்பையை வென்றுள்ளனர். வாழ்த்துகள் நண்பர்களே. விளையாட்டு நம்மை இணைத்துவிட்டது" என ட்வீட் செய்திருந்தார்.
அவரது இந்த ட்வீட் இணையவாசிகளை தூண்டிவிட்டது. புதுச்சேரி பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்ததை இன்னமும் பெருமையாகச் சொல்லும் கிரண் பேடியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

"நாம் இந்தியர்கள். உங்கள் விளம்பரத் தேடலை நிறுத்திக் கொள்ளுங்கள்" என ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, "புதுச்சேரியை நீங்கள் நேற்றிரவு பார்த்திருக்க வேண்டும்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை கடற்கரையில் பெருந்திரையில் நேரலையாக ஒளிபரப்பினோம். மக்கள் பிரான்ஸ் அணிக்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர். பிரான்ஸ் வென்றபோது அவர்களே வென்றதுபோல் மகிழ்ந்தனர். நான், புதுச்சேரி மக்களின் மனநிலையை, மகிழ்ச்சியையே பிரதிபலித்தேன்" என விளக்கமளித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close