[X] Close

ஆதார் எண்ணால் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி


octogenarian-woman-reunited-with-family-thanks-to-aadhaar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jul, 2018 10:27 am
  • அ+ அ-

ஆதார் அடையாள எண்ணால் 80 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் லக்‌ஷ்மிபாய். 80 வயதான இவர் கடந்த 2016 ஏப்ரல் 22-ம் தேதி சூரத் ரயில் நிலையத்திலிருந்து தனது பிள்ளைகளை சந்திப்பதற்காக ஜால்காவோன் புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் வயது மூப்பினால் ஏற்பட்ட ஞாபக மறதி காரணமாக போர்பந்தர் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார். ஜால்காவோன் ரயில் நிலையத்தில் காத்திருந்த லக்‌ஷ்மிபாயின் உறவினர்கள் அவர் அங்கு வராததால் அதிர்ச்சியடைந்தனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் என கடந்த இரண்டு ஆண்டுகளில் லக்‌ஷ்மிபாயை அவர்கள் தேடாத இடமில்லை.

ஆனால், லக்‌ஷ்மிபாயோ திருவனந்தபுரத்தில் உள்ளா அரசு காப்பகத்தில் இருந்தார். வழி தெரியாமல் சுற்றித் திரிந்த அந்த மூதாட்டியை ஃபோர்ட் காவல் நிலைய அதிகாரிகள் அரசு காப்பகத்துல் சேர்ந்தனர்.
அரசு காப்பக கண்காணிப்பாளர் ஷைனிமோல் கூறும்போது, "அவரிடம் மராத்தி, குஜராத்தி இன்னும் சில வடமாநில மொழிகளைத் தெரிந்தவர்களைக் கொண்டு பேச முயன்றோம். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
அப்போதுதான் சமூக நலத்துறை சிறப்பு செயலர் பிஜு பிரபாகர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள என் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். லக்‌ஷ்மிபாய்க்கு ஆதார் எண் எடுக்க முயன்றபோது அவருக்கு ஏற்கெனவே ஆதார் எண் இருப்பதை கணினி உறுதிப்படுத்தியது. அப்போதுதான் அவரது இருப்பிடம் குறித்த தகவலும் தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட சட்ட சேவை ஆணையம் மூலம் லக்‌ஷ்மிபாயின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லக்‌ஷ்மிபாயின் மகள்கள் சாதனா, விமல், சவிதா அவரது மருமகள் மங்கலா மற்றும் பேரப்பிள்ளைகள் மகேந்திரா, மெஹுல், சுஷில், விஷால் ஆகியோர் நேரில் வந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் மூதாட்டியை குடும்பத்துடன் ஆதார் எண் இணைத்து வைத்த சம்பவம் காப்பகவாசிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், லக்‌ஷ்மிபாயை அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close