[X] Close

ட்விட்டரில் 3 லட்சம் ஃபாலோயர்களை இழந்த மோடி 


twitter-clean-up-pm-modi-loses-3-lakh-followers-rahul-gandhi-17-000

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jul, 2018 13:58 pm
  • அ+ அ-

ட்விட்டர் இணையதளம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளையும் மூடப்பட்ட கணக்குகளையும் நீக்கி வருகிறது. இதனால், பிரபலங்கள் பலரது ட்விட்டர் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பிரதமர் மோடியின் ட்விட்டர் ஃபாலோவர்கள் எண்ணிக்கையில் 3 லட்சம் குறைந்துள்ளது. இதனால், ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 43.4 மில்லியனில் இருந்து 43.1 மில்லியனாகக் குறைந்தது. அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் ஃபாலோயர்கள் எண்ணிக்கையில் 17,000 குறைந்துள்ளது.
இத்தகவலை பெரும்புள்ளிகளின் ட்விட்டர் ஃபாலோவர்கள் எண்ணிக்கையை அன்றாடம் கணிக்கும் சோஷியல்பிளேட்.காம் ( SocialBlade.com ) இணையதளம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரமே ட்விட்டர் நிறுவனம் இத்தகைய கணக்கு சுத்திகரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி ட்விட்டர் எடுத்த நடவடிக்கையால், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையில் 74,132 குறைந்துள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஃபாலோயர்களில் 33,363-ம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஃபாலோயர்களில் 91,555 ஃபாலோவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஃபாலோவர்களில் 400,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ட்விட்டருன் சட்ட, கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு துறைத் தலைவர் விஜய கட்டே தனது வலைப்பக்கத்தில், "இது சற்று கடினமாக இருக்கலாம்.

ஆனால், துல்லியத்தன்மை, வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட இது முக்கியமானது" எனப் பதிவிட்டுள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close