[X] Close
 

நேற்று விஜய் மல்லையாவை பாராட்டியவர்; இன்று தவறு செய்துவிட்டதாக பம்மினார்


day-after-calling-vijay-mallya-smart-minister-says-its-a-mistake

  • பாரதி
  • Posted: 14 Jul, 2018 13:13 pm
  • அ+ அ-

மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் பழங்குடியினர்களுக்கான மாநாட்டில் பேசும்போது வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை பாராட்டிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

”நான் தவறுதலாக விஜய் மல்லையாவின் பெயரைப் பயன்படுத்திவிட்டேன். அவரது பெயரை நான் பயன்படுத்தியிருக்கக் கூடாது. வேறு உதாரணத்தைக் கூறியிருக்க வேண்டும். தவறு என் மீதுதான்" என அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

முன்னதாக நேற்று, தேசிய பழங்குடி தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய அவர், "நாம் தொழில் அதிபர் ஆக வேண்டும். நாம் புத்திசாலி ஆக வேண்டும். நாம் மிடுக்காக வேண்டும். நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் விஜய் மல்லையாவை விமர்சிக்கிறீர்கள். ஆனால் விஜய் மல்லையா என்ன செய்தார்? புத்திசாலிகள் சிலரை வேலைக்கு அமர்த்தினார். வங்கிகளிடமும், அரசியல்வாதிகளிடம், அரசாங்கத்திடமும் சில காரியங்களை செய்தார். வங்கிக் கடன்களை வாங்கினார். உங்களை அவரைப் போல் புத்திசாலியாவதிலிருந்து யார் தடுத்தார்கள்? அரசு அமைப்பில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்று ஆதிவாசி மக்களை தடுப்பது யார்? வங்கியாளர்களிடம் செல்வாக்கை காட்டுவதில் இருந்து உங்களை யார் தடுத்தார்கள்?" எனக் கேள்விகளை அடுக்கினார்.

இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில் முனைய விரும்பும் பழங்குடி மக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை முன்வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close