[X] Close

கன்றைக் கொன்ற சிறுத்தையை பழி தீர்த்த பசு


cows-kill-leopard-in-maharashtra

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jul, 2018 10:11 am
  • அ+ அ-

புனேவில் வனவிலங்கு சரணாலயத்தில் கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தையை பசுக் கூட்டம் சேர்ந்து கொன்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் வனவிலங்கு சரணாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுத்தை ஒன்று காயங்களால் உயிரிழந்தது.

இது குறித்து வன அலுவலர் கூறும்போது, "திங்கள் கிழமை காலை சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றுள்ளது. அப்போது அங்கிருந்த மாடுகள் ஒன்றுகூடி சிறுத்தையை விரட்டியுள்ளன. அப்போது ஒரு பசு மாடு சிறுத்தைடை தனது கூர்மையான கொம்பால் குத்தி மேலே தூக்கி வீசியது. இதில் பல அடி தூரம் சென்று விழுந்த சிறுத்தை பலத்த காயமடைந்தது. சிறுத்தை மீட்கப்பட்டு புனே நகரின் சிறுத்தை மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிறுத்தை சிகிச்சை பலனின்றி சிறுத்தை இறந்தது" என்றார்.

பசு மாடு கொம்பில் குத்தி தூக்கி வீசியதில் சிறுத்தையின் முதுகெலும்பு முறிந்ததோடு உள்காயமும் அதிகளவில் ஏற்பட்டதால் சிறுத்தை இறந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close