[X] Close
 

வன்முறையாளர்களை பாராட்டிய ஜெயந்த் சின்ஹா அந்தர் பல்டி


a-week-after-felicitating-ramgarh-lynching-convicts-jayant-sinha-expresses-regret

  • பாரதி
  • Posted: 11 Jul, 2018 16:24 pm
  • அ+ அ-

இறைச்சி வியாபாரியை தாக்கி கொன்ற வழக்கின் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கிய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பரவலாகக் கிளம்பிய எதிர்ப்பால் அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

"சட்டம் தனது கடமையை செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்கள். ராம்கர் சம்பவத்தில் சிக்கியவர்களுக்கு மாலை அணிவித்ததால் நான் வன்முறையாளர்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் வெளிப்பட்டிருந்தால். நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் பஜார் டண்ட் பகுதியில் ஒரு வாகனத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக நினைத்து 30 பேர் கொண்ட கும்பல் அதைத் தடுத்து நிறுத்தியது. அந்த வாகனத்தில் இருந்த ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் அடித்துக் கொலை செய்து வாகனத்துக்கும் தீவைத்துக் கொளுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது.

இந்த 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு நேற்றுச் சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையில், இறைச்சி வியாபாரியை தாக்கிக் கொன்ற வழக்கின் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கிய தனது மகனும், மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை உதவாகரை என்று அவரின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close