[X] Close
 

அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் அவலம்!


denied-hearse-van-mp-man-takes-mother-s-body-on-motorcycle

  • பாரதி
  • Posted: 11 Jul, 2018 16:11 pm
  • அ+ அ-

ஒடிசா, உத்தரப் பிரதேசம் என சில மாநிலங்களில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் சடலத்துடன் அலைந்த உறவுகள் குறித்த செய்திகள் அண்மையில் வெளியாகின.

ஆனால், இன்னமும் ஆங்காங்கே மருத்துவ சேவை பற்றக்குறை தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோகன்கர் மாவட்டத்திலும் இது போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் மோகன்கரைச் சேர்ந்தவர் குன்வர் பாய். இவர் பாம்பு தீண்டியதால் இறந்தார். இவரது மறைவு குறித்து குடும்பத்தினர் மோகன்கர் மருத்துவமனைக்கு தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு சடலத்தைக் கொண்டு வர மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அமரர் ஊர்தி அனுப்ப மறுத்துவிட்டது.

இதனால், குன்வரின் மகன் தனது தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதை ஊர்காரர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர மோகன்கர் மருத்துவமனைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்து வருவதாக மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.கே.அஹிர்வார் கூறியிருக்கிறார்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close