[X] Close

தங்கல் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன தென் கொரிய அதிபரின் மனைவி


south-korean-first-lady-a-dangal-fan-invites-phogat-family-for-tea

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jul, 2018 12:18 pm
  • அ+ அ-

தென் கொரிய அதிபர் மூன் ஜே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 8-ம் தேதி இந்தியா வந்த அவர் 11-ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் அதிபருடன் வருகை தந்திருக்கும் அவரது மனைவி கிம் ஜூங் சூக், இந்திய மாணவர்களுடன் தங்கல் திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் படத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோன கிம், கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகளை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து போகத் சகோதரிகளின் தந்தை மஹாவீர் சிங், "தென் கொரிய அதிபரின் மனைவி எங்கள் குடும்பத்தைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததில் மகிழ்ச்சி. இதை கவுரமாகக் கருதுகிறோம். அவருக்கு தங்கல் திரைப்படம் மிகவும் பிடித்துப்போயிருக்கிறது.

தங்கல் படம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் ஊடாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறியிருக்கிறார்.
2016-ல் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தங்கல். மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தை உருவாக்க அவர் தந்தை மஹாவீர் சிங் எதிர்கொண்ட சவால்களை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close