[X] Close

பொட்டு வைத்ததற்காக மதரஸாவிலிருந்து நீக்கப்பட்ட சிறுமி: வைரலாகும் தந்தையின் ஃபேஸ்புக் பதிவு


kerala-madrassa-expels-girl-student-for-sporting-bindi-father-s-facebook-post-goes-viral

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jul, 2018 11:11 am
  • அ+ அ-

கேரளாவின் வடபகுதியில் உள்ள ஒரு மதரஸாவில் இருந்து மாணவி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். காரணம் அவர் நெற்றியில் சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டதே. இதனைக் கண்டித்து மாணவியின் தந்தை உமர் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்த உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவுக்கு சிலர் எதிர்ப்பும் சிலர் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

விமர்சனத்துக்குள்ளான பதிவு..
"படிப்புடன் என் மகள் பாட்டு, நடனம், நடிப்பி என எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருக்கிறார். மதரஸாவில் அவர்தான் முதல் ரேங்க். மாவட்ட அளவில் நிறைய பரிசுகளை வென்றிருக்கிறார். இருந்தும் இந்த கல்வி ஆண்டில் அவர் மதரஸாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 

நல்லவேளை! அவரை கல்லால் அடித்துக் கொல்லவில்லை" என்று பதிவிட்டு மகள் சந்தனப் பொட்டுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். 

அந்தப் பதிவு நிமிடங்களில் வைரலானது. மதரஸாவுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக சிலர் பாராட்டுகளைத் தெரிவித்தாலும் இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதாக உமரை சிலர் வறுத்தெடுத்தனர்.
மத எதிப்பாளர் என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த உமர், "களங்கிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் இதை கொண்டாடதீர்கள். இது ஒன்றும் சர்வதேச பிரச்சினை அல்ல. இந்த ஒரு தருணத்தை ஆதாயமாக்கிக் கொண்டு இஸ்லாத்தை களங்கப்படுத்தாதீர்கள். இது ஒரு தனிப்பட்ட விஷயம். என் மதத்தை எதிர்ப்பவன் அல்ல நான். என் மதத்தை நேசிக்கிறேன். அதை ஆதரிக்கிறேன். அதேவேளையில் மற்ற மதங்களையும் மதிக்கிறேன். எல்லாவற்றையும்விட மனிதத்தை நேசிக்கிறேன்.

என்னைப் பற்றி அவதூறு பரப்புவர்கள் ஒருமுறையாவது ஃபேஸ்புக் மெசஞ்சரில்கூட உண்மை என்னவென்று கேட்டிருக்கலாமே! அதன் பின்னர் நீங்கள் என்னை ட்ரோல் செய்திருக்கலாம்.

என் மகளைப் போன்றே பல சிறுமிகள் இதற்குமுன் கலை நிகழ்ச்சிகளில் பொட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் இத்தகைய தண்டனை வழங்கப்படவில்லை. என் மகளுக்கு மட்டும்தான் இப்படி ஒரு தண்டனை. இதைத்தான் நான் எனது பதிவு மூலம் தட்டிக்கேட்க முற்பட்டேன்" 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close