[X] Close

திருடர்களைப் பிடித்த கான்ஸ்டபிளுக்கு பரிசு ஹனிமூன் ட்ரிப்


constable-arrests-robber-wins-honeymoon-trip

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jul, 2018 10:27 am
  • அ+ அ-

திருடர்களைப் பிடித்த கான்ஸ்டபிளுக்கு பரிசாக ஹனிமூன் ட்ரிப்புக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறது காவல்துறை.

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கே.இ. வெங்கடேஷ் நேற்றிரவு வழக்கமான ரோந்துப் பணிக்குப் பின்னர் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென அபயக் குரல் கேட்டது. அந்த வழியாக வந்து கொண்டிருந்த நபரிடம் சிலர் செல்போன் பறிப்பதை அவர் பார்த்தார்.

உடனே அந்தத் திருடர்களைத் துரத்தினார். கோரமங்கலா பகுதியை நோக்கி அவர்கள் பைக்கில் வேகமாகச் சென்றனர். சுமார் 4 கி.மீ. தூரம் சென்ற பின்னர் திருடர்களில் ஒருவர் தப்பி ஓட. ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தார் வெங்கடேஷ்.
அந்த ஒருவரும் வெங்கடேஷிடமிருந்து தப்ப முயற்சிக்க அவரை துரத்திப் பிடிக்கும்போது வெங்கடேஷுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. சிக்கியவர் பெயர் அருண் தயாள் (20) என்பது தெரியவந்தது.

இது குறித்து ஒயிட்ஃபீல்டு காவல் துணை ஆணையர் அப்துல் அஹத், "வெங்கடேஷின் சமயோஜித புத்தியும் துரிதமான நடவடிக்கையும் வழிப்பறி கும்பலை அடையாளம் காட்டியிருக்கிறது" எனப் பாராட்டினார்.
வெங்கடேஷுக்கு வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அறிந்த காவல் துணை ஆணையர் அப்துல் அஹாத், திருமணத்துக்குப் பின் வெங்கடேஷ் அவரது மனைவியுடன் மூனாறுக்கு செல்வதற்கு ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு செய்துள்ளார்.

தனது வேலைக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் வெங்கடேஷ் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close