[X] Close

ஹ்ரித்திக் ரோஷன் பாடலுக்கு ஆட்டம்போட்ட டான்சிங் அங்கிள்


dancing-uncle-dedicates-a-video-to-india-s-dance-king-hrithik-roshan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 16:47 pm
  • அ+ அ-

சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டால் அது சர்வதேச புகழையும் ஈட்டித் தரும். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா அதுவரை ஆராவாரம் இல்லாமல்தான் இருந்தார்.

ஆனால், கோவிந்தாவின் ஆப் கே ஆ ஜானே சே என்ற பாடலுக்கு ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பாலிவுட் பிரபலங்கள் பாராட்ட இணைய உலகம் கொண்டாட டப்பு அங்கிள், டேன்சிங் அங்கிள் என்றெல்லாம் அடைமொழி ஒட்டிக்கொண்டன.

சமூக வலைதளத்தின் சக்தியை வியந்து பார்த்த டான்சிங் அங்கிள், "ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது அறைக்கு வந்த தேவதை என்னை தனது மந்திரக் கோலால் ஆசிர்வதித்திருக்க வேண்டும். அடுத்தநாள் நான் விழித்தபோது இந்த உலகமே புதிதாக மாறியிருந்தது. என்னைப் போன்றோரை எப்படி இந்த சமூக வலைதளங்கள் ஹீரோவாக்கிவிடுகிறது என்பது விந்தையாக இருக்கிறது" என்றார்.

அந்த டான்சிங் அங்கிளை கோவிந்தா நேரில் அழைத்துப் பாராட்டினார். தொடர்ந்து சல்மான் கானுடனும் ஆடினார்.

அந்த வரிசையில் நேற்று முன் தினம் (ஜூலை 3) தனது வீட்டில் ஹ்ரித்திக் ரோஷனின் பாடலுக்கு செம்ம கூலாக ஆடியிருக்கிறார். டேன்சிங் அங்கிள் இந்தியாவின் டேன்ஸ் கிங்குக்கு அதை டெடிகேட் செய்திருந்தார்.

'கஹோ நா பியார் ஹே' படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலுக்கு ஆடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்து ஹ்ரித்திக் ரோஷனையும் டேக் செய்திருக்கிறார்.

இனி எந்நேரமும் டான்சிங் அங்கிளுக்கு ஹ்ரித்திக்கிடமிருந்து அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டான்சிங் அங்கிளை பாலிவுட் பிரபலங்கள் அர்ஜூன் கபூர், ரவீனா டண்டன், அனுஷ்கா சர்மா, தியா மிர்சா, திவ்யா தத்தா, சந்தியா மேனன் ஆகியோர் பாராட்டியிருக்கின்றனர். 

சஞ்சீவ் ஸ்ரிவஸ்தாவின் புகழ் மத்தியப் பிரதேச அரசாங்கத்தையே எட்டியதால்தான் அவர் விதிஷா முனிசபல் கார்ப்பரேஷனின் பிராண்ட் அம்பாசிடராக்கப்பட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close