[X] Close

வாட்ஸ் அப், யூடியூப் வசதியுடன் ஜியோ ஃபோன் 2 அறிமுகம்


jio-phone-2-with-qwerty-keypad-launched-at-ril-agm

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 14:06 pm
  • அ+ அ-

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜியோ ஃபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாட்ஸ் அப், யூடியூப் வசதிகள் உள்ளன. 

இந்த ஃபோனின் வடிவமைப்பு பிளாக் பெர்ரி போன்றுள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த ஃபோனில் குவெர்டி கீ போர்டு இருக்கிறது. ஜியோ ஃபோன் 2 மாடல் சந்தைக்கு வந்தாலும்கூட ஜியோ ஃபோனின் பழைய மாடலும் சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 2 ஃபோனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று ஜியோ கிகாஃபைபர் என்ற இல்லங்களுக்கான பிராட்பேண்ட் இணைப்பு சேவையையும் அறிவித்தது.

ஜியோ 2 விலை என்ன?
ஜியோ 2 ஃபோன் ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைக்கு வருகிறது. அறிமுக விலையாக ரூ.2,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபோன் பருவமழை கால ஹங்காமா என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜியோ ஃபோனை அளித்துவிட்டு ஜியோ 2 ஃபோனை வெறும் ரூ.501-க்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆஃபர் ஜூலை 21-ல் ஆரம்பிக்கிறது.

ஸ்பெஷிஃபிகேஷன்ஸ்:
டூயல் சின், நேனோ சிம் கார்டு பொருத்தும் வசதி, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே.  KAI ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. 512 எம்.பி. ராம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி. 2 மெகாபிக்சல் பேக் கேமரா மற்றும் VGA பிரன்ட் கேமரா உள்ளது. 2000mAh திறன் கொண்ட பேட்டரி. VoLTE, VoWiFi, என்எஃப்சி, ஜிபிஎஸ், ப்ளூடூத், எஃப்.எம். கனக்டிவிட்டி உள்ளது. வாய்ஸ் கமாண்டுக்கான பட்டனும் உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close