[X] Close
 

சச்சினின் செல்ஃபியும் இதயத்தை வென்ற ஷாருக்கின் ட்வீட்டும்


you-just-cannot-miss-srk-s-reply-to-sachin-s-selfie

  • பாரதி
  • Posted: 04 Jul, 2018 11:35 am
  • அ+ அ-

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த செல்ஃபி புகைப்படத்துக்கு ஷாருக்கானின் வரவேற்பு இணையவாசிகளின் இதயத்தை வென்றிருக்கிறது. 

மும்பையில் அண்மையில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாருக்கானுன், சச்சின் டெண்டுல்கரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அந்த செல்ஃபியை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். Jab SRK met SRT என்று எழுதி சச்சின் அந்த படத்தை ட்வீட் செய்திருந்தார்.

இதைப் பார்த்த ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராமில் சச்சினுடன் அவர் இணைந்த நடித்த பழைய விளம்பரத்தின் ஃபோட்டோவை இணைத்துப் பகிர்ந்தார். அந்த விளம்பரத்தில் சச்சினின் ஹேர்ஸ்டைல் போலவே ஷாருக்கானும் விக் வைத்திருப்பார்.

அத்துடன் நில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினுடனான செல்ஃபியைப் பகிர்ந்த ஷாருக், "இப்போதெல்லாம் யாரும் ஃபோட்டோ ஆல்பம் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் இந்தப் பெரிய மனிதருடனான புகைப்படத்தை எப்போதும் வைத்துக்கொள்ள ஒரு ஆல்பம் தயார் செய்யப்போகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் பாட்ஷாவின் இந்த இனிமையான வார்த்தைகளால் நெட்டிசன்கள் இதயம் குளிர்ந்துபோயிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close