[X] Close

'சும்மா இருப்பது’ ஒண்ணும் 'சும்மா' கிடையாது: நேரம் செலவிடலை ஆய்வு செய்கிறது மத்திய அரசு


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 17:01 pm
  • அ+ அ-

சும்மா இருப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல என்று ஒருதிரைப்படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாகக் கூறுவார். அதைப்போல் மக்கள் தாங்கள் சும்மா இருக்கும் நேரம், வேலை செய்யும் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறது மத்தியஅரசு.

அதாவது மக்கள்(ஆண்,பெண்) தங்களின் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள். ஊதியம் பெறும் வேலைக்கு எவ்வளவு செலவிடுகிறார்கள், ஊதியம் பெறாத வேலைக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், சும்மா எத்தனை மணிநேரம் இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வு கடந்த ஜனவரி மாதத்தில்இருந்து இந்திய மாதிரி ஆணையம் 4 கட்டங்களாக நடத்தி வருகிறது.

இந்த ஆய்வு குறித்து புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா லக்னோ பல்கலையில் பங்கேற்றுப் பேசும் போது தெரிவித்தார். அவர் பேசுகையில், " ஊதியம் பெற்று நாம் செய்யும் வேலையால், நமக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால், வருமானம் பெறாமல் செய்யும் பணிகள் வீட்டுவேலை செய்தல், சமூகப்பணிகள், சும்மா இருத்தல் ஆகியவற்றை கண்டுபிடிக்க நேரம் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது.  " எனத் தெரிவித்தார்.

img.jpg 

இந்த ஆய்வை மத்திய புள்ளியியல் நிறுவனம் நடத்தி வருகிறது. ஊதியம் பெறும் பணிக்கு மக்கள் எவ்வாறு நேரத்தை செலவு செய்கிறார்கள்,ஊதியம் பெறாத பணிக்கு மக்கள் நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதை இது ஆய்வு செய்கிறது.

கடந்த 1998-99-ம் ஆண்டுகளில் இதுபோன்ற ஆய்வு சோதனை முயற்சியாக, ஹரியானா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா, கேரளா, மேகலாயா ஆகிய மாநிங்களில் நடத்தப்பட்டது. ஆனால், நாடுமுழுவதும் இதுபோன்ற  ஆய்வு நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close