[X] Close

நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் எம்.பி.க்கள்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:56 am
  • அ+ அ-

நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் 2 நாள் முகாமை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று தொடங்கிவைத்தார்.

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் இதுவரை 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் 2 நாள் முகாமை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியபோது,"130 கோடி மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கின்றனர். இது ஜனநாயகத்தின் கோயில். இந்த கோயிலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். மக்களவைத் தலைவருடன் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினி உள்ளிட்டோர் துடைப்பத்தால் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close