[X] Close

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ஊடுருவல் இல்லை: ராணுவத் தளபதி பிபின் ராவத் தகவல்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:57 am
  • அ+ அ-

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

லடாக் பகுதியில் சீன ராணுவத் தினர் ஊடுருவியதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியா கின. இதுதொடர்பாக பிபின் ராவத் திடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

லடாக் அருகே உள்ள டெம் சோக் பகுதியில் தலாய்லாமாவின் பிறந்த நாளினை திபெத்தியர் கள் கொண்டாடி வருகின்றனர். அதற்காக அப்பகுதிகளில் திபெத் திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவகாரங்களை கண்காணிப்பதற்காக சீன ராணுவ வீரர்கள் அவர்களின் எல்லைப் பகுதி யில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள் ளனர். மற்றபடி, அவர்கள் நமது எல்லையில் ஊடுருவவில்லை என அவர் தெரிவித்தார்.

கார்கில் போர் வெற்றி தினம் அடுத்த வாரம் கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு, கார்கில் போர் குறித்த கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசியதாவது:

மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதியை இந்தியா ஒருபோதும் கைப்பற்ற நினைக்காது. அதேசமயத்தில், நமது நாட்டுக்கு சொந்தமான ஒரு சிறிய இடத்தை கூட இந்தியா விட்டுக்கொடுக்காது. இதனை பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே நாம் உணர்த்தியது கார்கில் போரில்தான்.

நமது ராணுவ வீரர்களின் தியாகத்தாலும், தீரத்தாலும் அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட நமது பகுதிகளை மீண்டும் நாம் மீட்டெடுத்தோம். இந்த தினத்தில், கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைவுகூர வேண்டியது நமது கடமையாகும்.

கார்கில் போரில் பாகிஸ் தானுக்கு தகுந்த பாடம் கற்றுக் கொடுத்த போதிலும், இந்தி யாவை சீண்டுவதை அந்நாடு நிறுத்தவில்லை. இந்தியா மீது மறை முக போர் தொடுப்பதையும், இந்தி யப் பகுதிகளுக்குள் ஊடுருவதை யும் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வருகிறது. எனினும், அவர்களின் முயற்சிகள் அனைத்துமே நமது ராணுவ வீரர்களால் முறியடிக்கப் பட்டு வருகின்றன.

இந்தியா மீது பாகிஸ்தான் தொடுக்கும் ஒவ்வொரு அத்துமீறல் களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பிபின் ராவத் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close