[X] Close

பொய் பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்


50-000

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:54 am
  • அ+ அ-

பொய்யான பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

இஎஸ்ஐ அலுவலகத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர், கடந்த 2011-ம் ஆண்டில் சக ஆண் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார். இதுதொடர்பாக இஎஸ்ஐ சார்பில் உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையில், பெண் அதிகாரியின் புகாருக்கு ஆதாரமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

உள்விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜே.ஆர்.மிதா விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். "பெண் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close