[X] Close

மேற்கு வங்கத்தில் 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய விருப்பம்: கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் தகவல்


107

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:20 am
  • அ+ அ-

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங் கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி களைச் சேர்ந்த 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய விரும்புகின்ற னர் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்து உள்ளார்.

அண்மையில் நடந்த மக்கள வைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களையும் பாஜக 18 இடங்களையும் கைப்பற்றின. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை ஆளும் திரிணமூலுக்கு நிகராக வளர்ச்சிப் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, மார்க் சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ பாஜகவில் அண்மையில் இணைந் தனர். மேலும் திரிணமூல் கட்சியை சேர்ந்த 60 கவுன்சிலர்களும் பாஜகவில் ஐக்கியமாகினர். இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் முகுல் ராய் கொல்கத்தா வில் நேற்று கூறியபோது, "திரிணமூல் காங்கிரஸ், மார்க் சிஸ்ட், காங்கிரஸை சேர்ந்த 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது" என்று தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய் கடந்த 2017 செப்டம்பரில் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜக வில் இணைந்தார். தற்போது மேற்குவங்க பாஜகவின் மூத்த தலைவராக உள்ளார். அவரது பேட்டி மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகுல் ராயின் முயற்சி வெற்றி பெற்றால் கர்நாடகா, கோவா மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அரசியல் சூழல் மாறும் என்று தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close