[X] Close

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 நாளை விண்ணில் பாய்கிறது: குடியரசுத் தலைவர், இரு மாநில ஆளுநர்கள் பங்கேற்பு


3-2

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:22 am
  • அ+ அ-

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணிநேர கவுன்ட்-டவுன் இன்று காலை தொடங்கு கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப் பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து, படம் எடுத்து அனுப்பியது.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற் றதை அடுத்து, நிலவில் தரை யிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதையடுத்து, அதிநவீன வசதிகளு டன் ரூ.610 கோடி செலவில் சந்திர யான்-2 விண்கலம் உருவாக்கப் பட்டுள்ளது.

இதை விண்ணில் செலுத்த 4 முறை திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அனைத்து விதமான சோதனைகளும் முடிந்துள்ள நிலையில், விண்ணில் ஏவப்படுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் நாளை (15-ம் தேதி) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இஸ்ரோ மையத்தில் இருந்தபடி, சந்திரயான்-2 புறப்படுவதை அவர்கள் நேரில் பார்வையிடுகின்றனர். ராக்கெட் புறப்படுவதற்கான 20 மணிநேர கவுன்ட்-டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்குகிறது.

சந்திரயான்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன. சந்திரயான்-2 விண்கலத்தை சுற்றுப்பாதை மாற்ற ஆர்பிட்டர் உதவும். நிலாவில் தரையிறங்க லேண்டர் கருவி உதவியாக இருக்கும். நிலாவின் மேற்பகுதியை ரோவர் வாகனம் ஆய்வு செய்யும். சந்திரயான்-2 விண்கலம் 45 நாட்கள் பயணத்துக்கு பிறகு, செப்டம்பர் 6-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றதும், நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநர்களாக வனிதா முத்தையா, ரீத்து கரிதால் ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close