[X] Close

கர்நாடக அரசியல் குழப்பம்: சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; மேலும் 5 எம்எல்ஏக்கள் முடிவு


5

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 16:58 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து பதவி விலகிய எம்எல்ஏக்களில் மேலும் 5 பேர், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார்  8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனவும், அதை ஏற்க முடியாது எனவும் கூறி நிராகரித்து விட்டார். இந்த சூழலில் மேலும் 3 எம்எல்ஏக்கள் பதவி விலகினர்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை நேரில் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும் எனக் கூறினர்.

இதையடுத்து மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பெங்களூரு திரும்பி சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

இந்தநிலையில் பதவி விலகிய எம்எல்ஏக்களில் மேலும் 5 பேர், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வழக்கறிஞர் நாகராஜ் கூறுகையில் ‘‘ஆனந்த் சிங், முனிரத்னா, ரோஷன் பெய்க், நாகராஜ், சுதாகர் ஆகிய 5 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்ககோரி உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளனர். இதற்கான மனுவை தயார் செய்யும்படி என்னிடம் கோரியுள்ளனர். இந்த மனு திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ எனக் கூறினார்.

கர்நாடக அரசியல் சிக்கல் தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close