[X] Close

கோவாவில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய 3 பேருக்கு அமைச்சர் பதவி


3

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 16:04 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

கோவாவில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். புதன் கிழமை வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரகாந்த் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார்.

கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உட்பட காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதன் மூலம் 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 17-ல் இருந்து தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பான்மைக்கு கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளை இனி பாஜக சார்ந்திருக்க வேண்டியதில்லை.

இந்த எம்எல்ஏக்களுடன் முதல்வர் பிரமோத் சாவந்த் டெல்லி சென்று பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக, கூட்டணி கட்சியான கோவா முற்போக்குக் கட்சியிலிருந்த மூன்று அமைச்சர் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ரோகன் கவுந்தே ஆகியோரை பதவி விலகுமாறு முதல்வர் சாவந்த் கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய 3 பேர் இன்று அமைச்சர்களாக்கப்பட்டனர். கடந்த புதன்கிழமை வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரகாந்த் கவேல்கர் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். ஜெனிபர், நேரி ருத்ரிகியோஸ் ஆகியோரும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர துணை சபாநாயகர் மைக்கல் லோபோவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மிர்துலா சின்ஹா, புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close