[X] Close

குப்பை இல்லாததால் காற்றை பெருக்குகிறாரா? நெட்டிசன்கள் கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளான எம்.பி.ஹேமமாலினி


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 15:44 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் அங்கமாக  நாடாளுமன்றத்தின் வெளியே தூய்மை பணியில் எம்.பி ஹேமமாலினி குப்பைகளை சுத்தப்படுத்திய விதத்தால் அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.

மதுரா எம்.பி.யுமான ஹேமமாலினி மற்றும் பாஜக அமைச்சர் அனுரக் தாகூர் ஆகியோர் ’தூய்மை இந்தியா’வின் அங்கமாக இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், அனுரக் தாக்கூர் தனது கையில் இருக்கும் துடைப்பத்தால் வேகமாக குப்பைகளை பெருக்குகிறார். ஆனால் ஹேமமாலினியோ கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு  ஏற்கனவே சுத்தமான இடங்களை துடைப்பத்தால் பெருக்குகிறார்.

 

 

 

பெருக்குவதற்கு குப்பை இல்லாத நிலையில் அவர் துடைப்பம் தரையிலும் சரியாகப் படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹேமமாலினி  குப்பையை பெருக்காமல் காற்றை பெருக்குகிறார் என்று சமூக வலைதளங்களில்  நெட்டிசன்களால் விமர்சனத்துக்கு உள்ளானார்.

அதில் சில நெட்டிசன்கள் பதிவுகள்:

ட்வீட் 1

 

ட்வீட் 4  

 

இதன் காரணமாக ஹேம மாலினியின் பெயர் இந்திய அளவில் டிரெண்டிங்கில்  இடம்பிடித்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close