[X] Close

பண பலத்தை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க சதி: பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:41 am
  • அ+ அ-

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில் பண பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக ராகுல் காந்தி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தார்.

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைவர் அஜய் படேல் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் இங்குள்ள பெரு நகர நீதிமன்றத்தில் ராகுல் ஆஜ ரானார்.

இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அர சியல் எதிரிகளான ஆர்எஸ்எஸ் மற் றும் பாஜகவினர் எனக்கு எதி ராக தொடர்ந்த மற்றொரு வழக் கில் ஆஜராக நான் அகமதாபாத் வந்துள்ளேன். அவர்களுக்கு எதி ரான எனது சிந்தாந்தப் போரை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப் பளித்த இவ்விரு அமைப்பினருக் கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில் அகமதாபாத் மாவட்ட கூட் டுறவு வங்கியில் ஐந்தே நாட் களில் ரூ.750 கோடி பழைய நோட்டு கள் முறைகேடாக மாற்றப்பட் டுள்ளது என்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் கள் கூறியதற்காக அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

ராகுலுக்கு ஜாமீன்

இதனிடையே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் ராகுல் கூறும்போது, “மாநிலங் களில் அரசை கவிழ்க்க பாஜக தனது பண பலத்தை பயன் படுத்தி வருகிறது. இந்த உண் மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடகிழக்கு மாநிலங் களில் பாஜகவின் இத்தகைய போக்கை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்” என்றார்.

கர்நாடகாவில் ஆளும் காங் கிரஸ், மஜத கூட்டணியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் அம் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி, பாஜக மீது குற்றம் சாட்டி யுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close