[X] Close

மராத்வாடா சமூகத்துக்கு இடஒதுக்கீடு; மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:32 am
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் மராத்வாடா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 52 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் நிலையில் மராத்வாடா சமூகத்துக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் 68 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்றும் மராத்வாடா சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசு இந்த இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளதாகவும் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிர அரசின் இடஒதுக்கீடு அரசியல் சாசன ரீதியானது என்று கூறி மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.நோட்டீஸ் மீது மகாராஷ்டிரா அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close