[X] Close

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:01 am
  • அ+ அ-

இந்திய குடியுரிமை வேண்டும் என்று முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, தீவிரவாதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தை அறிவித்தது. அப்போது ஏராளமான தீவிரவாதிகள் பாதுகாப்புப் படைகளிடம் சரண் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மனைவிகள், ஆக்கிரமிப்புகாஷ்மீர், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்களும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள், காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியபோது, “ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 350 பெண்கள் காஷ்மீரில் பரிதவித்து வருகிறோம். எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது எங்களது சொந்தநாடுகளுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close