[X] Close
 

போஸ்ட்கார்டில் பிரதமருக்கு நன்றி சொன்ன தாதர் நாகர் ஹவேலி மக்கள்: ட்விட்டரில் நன்றி கூறிய மோடி


dadra-and-nagar-haveli-people-write-postcard-to-pm-modi-for-first-medical-college

  • பாரதி
  • Posted: 01 Jul, 2018 20:46 pm
  • அ+ அ-

தாதர் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மருத்துவக் கல்வி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது அந்த யூனியன் பிரதேசத்தில் அமையும் முதல் மருத்துவக் கல்லூரி.

இதனையடுத்து அந்த யூனியன் பிரதேச மக்கள் போஸ்ட்கார்டுகள் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். இரு கார்டில், "சார், தாதர் நாகர் ஹவேலியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு நன்றி. எங்களுக்கு அது மிகவும் தேவை. நன்றி" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, "நான் இன்று எனக்கு வந்த சில கடிதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாதர் நாகர் ஹவேலி மக்கள் அங்கு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு நன்றி  தெரிவித்துள்ளனர். நிச்சயமாக அந்த மருத்துவக் கல்லூரியால் இளைஞர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close