[X] Close

சுஷ்மாவை தரக்குறைவாக விமர்சித்த ட்விட்டராட்டி: உருக்கமாக பதிலடி கொடுத்த கணவர்


for-troll-who-targetted-sushma-swaraj-her-husband-s-emotional-response

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Jul, 2018 20:16 pm
  • அ+ அ-

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சமீப காலமாகவே ட்விட்டராட்டிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முஸ்லிம் தம்பதி பாஸ்போர்ட் பெற உதவிய விவகாரத்தில் அவர் இவ்வாறு விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று முகேஷ் என்ற ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கவுசாலை டேக் செய்து ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டில், "இன்றிரவு உங்கள் மனைவி வந்தவுடன் அவரை ஏன் நீங்கள் அடிக்கக்கூடாது? முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம் என்று அவருக்கு பாடம் கற்பியுங்கள். முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார்.

முகேஷ் குப்தாவின் ட்வீட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். முகேஷ் தனது ட்விட்டர் ஐடியை டெலீட் செய்தார். ஆனால், முகேஷின் ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கவுசல் இரண்டு உருக்கமான ட்வீட்களைப் பகிர்ந்தார்.

முதல் ட்வீட்..
உங்கள் ட்வீட் எங்களுக்கு தாங்க இயலாத் துன்பத்தைத் தந்துள்ளது. இந்த விஷயத்தைப் பகிர வேண்டும் என நினைத்தேன். எனது தாயார் 1983-ல் கேன்சரில் மறைந்தார். அப்போது சுஷ்மா எம்.பி.,யாக இருந்தார். அவர்தான் அப்போதைய கல்வி அமைச்சரும்கூட. என் தாயார் மருத்துவமனையில் இருந்த ஓராண்டு காலமும் அவர் மருத்துவமனையில்தான் இருந்தர். பணியாள் யாரையும் அவர் அனுமதிக்கவில்லை. 

இரண்டவது ட்வீட்..
குடும்பத்தின் மீது அத்தகைய ஈடுபாடு கொண்டவர் சுஷ்மா. என் தந்தையின் சிதைக்கு சுஷ்மாதான் தீ மூட்டினார். அவரை நாங்கள் அவ்வளவு மதிக்கிறோம். தயவு செய்து அவரை அப்படியெல்லாம் பேசாதீர்கள். சட்டத்துறையிலும் சரி அரசியலிலும் சரி நாங்கள் முதல் தலைமுறையினராக அடியெடுத்து வைத்துள்ளோம். சுஷ்மாவின் நலன் தான் எங்களுக்கு முக்கியம்" என ட்வீட் செய்தார்.

ஆறுதல் சொன்ன அர்விந்த் கேஜ்ரிவால்..
சுஷ்மாவின் கணவர் ட்வீட்டுக்கு பதிலளித்த அர்விந்த் கேஜ்ரிவால், "சார்.. இவர்களுக்கு எல்லாம் விளக்கம் கூறாதீர்கள். அவர்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை எல்லோரும் அறிவர். இது அரசியல். ஆனால், அரசியல் இவ்வளவு தரம் தாழ்துவிட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். உங்கள் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close